உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலியான பட்டாவை ரத்து செய்யக் கோரி பாஜ., மனு

போலியான பட்டாவை ரத்து செய்யக் கோரி பாஜ., மனு

பரமக்குடி; பரமக்குடியில் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் போலி பட்டா பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து மீண்டும் உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என பா.ஜ., சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி பகுதியில் 1996ல் ஒப்படைப்பு ஆவணம் மூலம் 62 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 62 பேரின் பெயர்களில் உள்ள பட்டாவை நத்தம் பட்டாவிற்கு மாறுதல் செய்வதாக கூறி 5 பேருக்கு மட்டுமே மாற்றி உள்ளனர். மீதமுள்ளவர்களை விட்டு விட்டு புதிதாக 181 பேருக்கு மாற்றி கொடுத்து உள்ளனர். ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை மோசடியாக பெயர் மாற்றம் செய்து உள்ளனர். எனவே உரியவர்களுக்கு மீண்டும் பட்டா வழங்க வேண்டும் என பா.ஜ., நகர் தலைவர் சுரேஷ் பாபு தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தாசில்தார் வரதனிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !