பா.ஜ., வினர் கொண்டாட்டம்
முதுகுளத்துார்: பீகார் மாநில தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து முதுகுளத்துார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் மோகன்தாஸ் தலைமையில் கட்சியினர் பஸ்ஸ்டாண்டில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தன்னார்வ தொண்டு நிறுவன மாவட்ட செயலாளர் இந்திரா, ஒன்றிய பொதுச் செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். பா.ஜ., நிர்வாகிகள் கவிக்குமார், விஜயன், சேதுராமு, சேதுராமன், குணசேகர் உட்பட பலர் இருந்தனர்.