பா.ஜ., புதிய மாவட்ட தலைவர் பதவியேற்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில்பா.ஜ.,மாவட்டத்தலைவராக முரளிதரன் பதவியேற்றார்.பா.ஜ., ராமநாதபுரம் மாவட்டத்தலைவராக ராமேஸ்வரத்தைசேர்ந்த கே.முரளிதரன் தேர்வாகியுள்ளார். ராமநாதபுரத்தில்நடந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கருப்புமுருகானந்தம் முன்னிலையில் முரளிதரன் மாவட்டத்தலைவராக பதவியேற்றார்.முன்னாள் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், நகராட்சி கவுன்சிலர் குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.