ரத்ததான முகாம்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசையில் உள்ள அப்துல் கலாம் இளைஞர் உதவும் கரங்கள் அமைப்பு மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர் உதவும் கரத்தின் அமைப்பாளர் பாபு தலைமை வகித்தார். இதில் ஏராளமான கிராம இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.