மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்
05-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுத்தனர். அதிகளவில் ரத்ததானம் வழங்கிய த.ம.மு.க., மருத்துவ சேவை அணி, டாக்டர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை உள்ளிட்ட அமைப்பினருக்கு கலெக்டர் தேசிய தன்னார்வ ரத்ததான விருது வழங்கினார். மேலும் ரத்ததானம் வழங்கிய தன்னார் வலர்கள் 35 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் அமுதாராணி, ரத்தவங்கி பிரிவு மருத்துவ அலுவலர் மணிமொழி, மருத்துவமனை கண்காணிப்பாளர் நுார் முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
05-Oct-2025