மேலும் செய்திகள்
யாதுமானவள் நிகழ்ச்சி
18-Sep-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, போகலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்து ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர்கள் ராசிகா அப்துல்லா, அட்டிப் அப்துல்லா, ஆயிசத்துல் நசீதா, அஜீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 75 பேர் ரத்த தானம் செய்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் மணிமொழி மேற்பார்வையில் முகாம் நடந்தது. நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகநாதன் ஏற்பாடுகளை செய்தார்.
18-Sep-2025