திருவெற்றியூருக்கு வழிகாட்டும் போர்டு
திருவாடானை; திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். திருவிழா நாட்களில் பாதயாத்திரையாகவும் செல்வார்கள். திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்குசெல்லும் விலக்கு ரோட்டில் வழிகாட்டும் போர்டு இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து கடம்பாகுடி விலக்கு ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.