உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிக லைட் வெளிச்சத்தில் மீன் பிடித்த படகு சிறைபிடிப்பு

அதிக லைட் வெளிச்சத்தில் மீன் பிடித்த படகு சிறைபிடிப்பு

தொண்டி: தொண்டி கடலில் தடையை மீறி லைட் வெளிச்சத்தில் மீன் பிடித்த புதுக்குடி மீனவர்களின் படகை நம்புதாளை மீனவர்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.தொண்டி கடலில் சில கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இரவில் கடலுக்கு சென்று லைட் வெளிச்சத்தில் மீன் பிடிக்கின்றனர். ஜெனரேட்டர் வசதியுடன் ஆழ் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கம்பங்களில் அதிக வெளிச்சமுள்ள பல்புகளை கட்டி வெளிச்சத்தை காட்டுகின்றனர். இந்த வெளிச்சத்திற்கு மீன்கள் கும்பலாக குவியும் போது வலையை விரித்து மொத்தமாக அள்ளிகொண்டு கரைக்கு வருகின்றனர். முரல், நண்டு, கனவாய் உள்ளிட்ட பல வகையான மீன்கள் மொத்தமாக கிடைப்பதால் இவ்வாறு மீன்களை பிடிப்பதை சில மீனவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு புதுக்குடியை சேர்ந்த மீனவர்கள் நான்கு படகுகளில் லைட் வெளிச்சத்தில்மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த நம்புதாளை மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்தனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு படகை சிறைபிடித்து தொண்டி மரைன் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும்மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ