4ம் நாளாக பாம்பனில் படகு சவாரி ரத்து
ராமேஸ்வரம்: அக்.,19 முதல் மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதனால் அக்., 20 முதல் மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை விதித்தனர். இச்சூழலில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைத் தீவு வரை செல்லும் வனத்துறையின் சுற்றுலா படகு சவாரி அக்., 20 முதல் ரத்து செய்யப்பட்டது. நேற்று 4ம் நாளாக பாம்பன் கடலில் கொந்தளிப்பு இருந்ததால் சுற்றுலா படகுகளை இயக்காமல் தொடர்ந்து நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து சூறாவளி வீசுவதால் இன்றும் படகு சவாரி இருக்காது என வனத்துறையினர் தெரிவித்தனர்.