உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் புத்தக வாசிப்பு இயக்கம்

கமுதியில் புத்தக வாசிப்பு இயக்கம்

கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு ரஹ்மானியா உயர்நிலைப்பள்ளியில் கமுதி கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தக வாசிப்பு இயக்கம் நடந்தது. கிளைத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். முதல்வர் முகமது இப்ராஹிம், நிர்வாக அதிகாரி முகமது இர்ஷாத், சங்கத்தின் மாவட்ட தலைவர் வான்தமிழ் இளம்பரிதி முன்னிலை வகித்தனர்.செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார். ‘பார்பர் நாமா’ என்ற கவிதை தொகுப்பை எழுத்தாளர் நடராஜன் பாரதிதாஸ் வாசித்தார். எழுத்தாளர் காளிமுத்து, நுாலகர் கண்ணதாசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் அருள்ராஜ் நன்றி கூறினார். ––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !