உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிப்பால் சிறுவன் பலி கடல் தொழிலாளர்கள் கண்டனம்

சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிப்பால் சிறுவன் பலி கடல் தொழிலாளர்கள் கண்டனம்

ராமநாதபுரம்,: -ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்ட போது சிறுவன் முகிலன் 16, பலியானார். இதுபோன்ற சட்டவிரோத மீன் பிடிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கடல் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ராமநாதபுரத்தில் கடல் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தெரிவித்ததாவது: பாம்பன் ஊராட்சி நாலுபனை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் முகிலன் 16. குடும்ப வறுமையால் துாத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியில் சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டார். இதில் மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த மீன் பிடிப்பு முறை ஆபத்தானது என நாங்கள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். வழக்கம் போல் இந்த ஆபத்தான மரணத்தை சிலிண்டர் மீன் பிடிப்பாளர்கள் மறைக்க முற்படுவார்கள். அதற்கு அரசு நிர்வாகங்களும் துணை போகின்றன.இந்த சட்ட விரோத மீன் பிடிப்பு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இம்மீன்பிடிப்பு முறையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரின் வறுமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற சட்ட விரோத மீன் பிடிப்புக்கு துணை போகும் அரசு நிர்வாகத்தை கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை