மேலும் செய்திகள்
மூளைச்சாவு அடைந்தவரால் ஆறு பேருக்கு மறுவாழ்வு ..
26-Dec-2024
மதுரை : - கடலாடி அவதாண்டை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா 37. விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.டிச. 24ல் இளையராஜா ரோடு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டிச. 25ல் சேர்க்கப்பட்டார். டிச. 27 அதிகாலையில் அவரது மூளை நிரந்தரமாக செயலற்ற நிலைக்கு சென்றதை டாக்டர்கள் உறுதி செய்தனர். அவரது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் இயங்கும் நிலையில் இருந்ததால் குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் விளக்கினர். சிறுநீரகங்களில் ஒன்று அம்மருத்துவமனை நோயாளிக்கும் மற்றொன்று பெரம்பலுார் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் மருத்துவக் கல்லுாரிக்கும், கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் கல்லீரல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.சில நாட்களுக்கு முன் இதே ராமநாதபுரம் கடலாடி மேலகிடாரத்தைச் சேர்ந்த சஞ்சய், 22 ரோடு விபத்தில் சிக்கி டிச. 24 ல் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயம் உட்பட 6 உறுப்புகள் எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
26-Dec-2024