உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் செங்கல்லில் வாறுகால்

ராமேஸ்வரத்தில் செங்கல்லில் வாறுகால்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் கான்கிரீட் கலவைக்கு பதிலாக செங்கல்லில் மழைநீர் வாறுகால் அமைத்து முறைகேடு செய்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் நகராட்சி காந்தி நகரில் மழைக்காலத்தில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற நகராட்சி வாறுகால் உள்ளது. இந்த வாறுகாலில் 100 மீ., சேதமடைந்து இருந்ததால் இதனை கான்கிரீட் கலவையில் உயர்த்தி புதிய சிமென்ட் சிலாப் மூடி வைத்து புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் ரூ.3.20 லட்சத்திற்கு தனியாருக்கு டெண்டர் விட்டது. ஆனால் கான்கிரீட் கலவைக்கு பதில் செங்கல் கட்டுமானத்தில் வாறுகாலை உயர்த்தி, புதிய சிமென்ட் சிலாப் அமைத்து புதுப்பித்தனர். தற்போது நகராட்சிகளில் செங்கல் கட்டுமானத்தில் வாறுகால் அமைப்பதில்லை என உத்தரவு இருந்தும், காந்தி நகரில் அமைத்த செங்கல் வாறுகால் உறுதி தன்மை இழந்து மீண்டும் சேதமடையும்.இந்த வாறுகால் கட்டுமானத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து கலெக்டர் சிம்ரனஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி கூறுகையில், செங்கல்லில் வாறுகால் அமைக்க அனுமதி இல்லை. இருப்பினும் காந்தி நகரில் செங்கல்லில் வாறுகால் அமைத்த மதிப்பின்படி கணக்கெடுத்து பில் தொகை வழங்கப்படும். மற்றபடி முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை