உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் குப்பை அள்ளும் ஹைட்ராலிக் லாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் அரசு நிதி காட்சி பொருளாக வேண்டாமே

கீழக்கரையில் குப்பை அள்ளும் ஹைட்ராலிக் லாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் அரசு நிதி காட்சி பொருளாக வேண்டாமே

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் முறையாக குப்பை தொட்டிகள் வைக்காமல் உள்ளதால் ரோட்டோரங்களில் குப்பை போடும் செயல் பல இடங்களில் அரங்கேறுகிறது.கீழக்கரை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 10 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து சப்ளை செய்யும் குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளது.எனவே அரசு நிதி வீணடிப்பதை தவிர்க்க முறையாக பழுது நீக்கி பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த நையினா முகம்மது கூறியதாவது:கீழக்கரை நகராட்சியில் குப்பையை உடனுக்குடன் எடுக்க வேண்டிய ஹைட்ராலிக்ஸ் லாரி பயன்பாடின்றி உள்ளது. ஏராளமான குப்பைத் தொட்டிகள் பயன்பாடின்றி வடக்கு தெரு மணல்மேடு பகுதியில் குவித்து வைத்துள்ளனர். எனவே ஹைட்ராலிக் லாரிகளை பழுது நீக்கி முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.குப்பைத் தொட்டியில் குப்பையை போடுவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியே கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கான 10 ஆழ்துளை கிணறுகளை உரிய முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சம் செலவு செய்து செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் காட்சி பொருளாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் வேதனையளிக்கிறது. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ