உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இடிந்துவிழும் பி.எஸ்.என்.எல்., அலுவலகசுற்றுச்சுவர்: விபத்து அச்சத்தில் மக்கள்

இடிந்துவிழும் பி.எஸ்.என்.எல்., அலுவலகசுற்றுச்சுவர்: விபத்து அச்சத்தில் மக்கள்

ராமநாதபுரம்,: ராமநாதபுரத்தில் பயன்பாடில்லாத பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவர் விரிசல் அடைந்து இடிந்து விழுகிறது. புதர்மண்டி பாம்புகள் வருவதால் அருகே குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மதுரை ரோட்டில் எல்.ஐ.சி., அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளது. இங்கு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் வளாகத்தை சுற்றியும் மரங்கள், செடிகள் வளர்ந்து புதர்மண்டி தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாடும் பகுதியாக மாறியுள்ளது. குறிப்பாக அலுவலகத்தின் பின்புறம் வீடுகளுக்கு அருகேயுள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.மேலும் இரவு நேரத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இதனால் அலுவலகம் பின்புறம் தினமலர் நகரில் குடியிருக்கும் மக்கள் வீட்டிற்கு வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். பாம்புகள் தொந்தரவால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பி.எஸ்.என்.எல்., நிறுவன அதிகாரிகள் விரிசல் அடைந்துள்ள சுற்றுச்சுவரை அகற்றி, புதிதாக கட்டவும், புதர்களை அகற்றிட வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி