மேலும் செய்திகள்
முளைப்பாரி விழா
01-Aug-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுாரில் முத்து மாரியம்மன், சாத்தையனார் கோயில் விழாவை முன்னிட்டு எருது கட்டு விழா நடந்தது. முன்னதாக மூலவர் களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து கிராமத்தார் வழிபாடு செய்தனர். பின்னர் எருதுகட்டு விழா நடைபெற்றது. நீண்ட வடக்கயிறு மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டு அவிழ்த்து விடப் பட்டது. மைதானத்தில் வலம் வந்த காளைகளை இளைஞர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிலை நாட்டினர். அடங்க மறுத்த காளைகளுக்கும், அடக்கிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
01-Aug-2025