உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டும் குழியுமான சாலை: மக்கள் சிரமம்

குண்டும் குழியுமான சாலை: மக்கள் சிரமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை செல்லும் தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார்--கடலாடி சாலை ஏனாதி ரோட்டில் இருந்து 5 கி.மீ.,ல் கிராமம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.அதன் பின் பராமரிப்பின்றி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடப்பதற்கு கூட லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.பள்ளத்தில் தண்ணீர் தேங்குதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கிராமத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி