மேலும் செய்திகள்
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
14-Jun-2025
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் அரசு பஸ் விபத்தில் கை முறிந்தவருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் மதுரை சென்ற அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.தங்கச்சிமடம் அருகே மெய்யம்புலி கிராமத்தை சேர்ந்த நாகு மகன் கோவிந்தராஜ் 40. இவர் 2019 மார்ச் மாதம் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு மதுரை டிப்போவை சேர்ந்த அரசு பஸ்சில் பின் இருக்கையில் ஜன்னல் ஒரத்தில் அமர்ந்து பயணம் செய்தார். பெருங்குளம் அருகே சுங்கச்சாவடி செக்போஸ்ட் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது டிரைவர் பஸ்சை ஓரமாக இயக்கியதால் அங்கிருந்த கட்டடத் துாணில் கோவிந்தராஜ் கை மோதியதில் கை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக கோவிந்தராஜ் இழப்பீடு கேட்டு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2024ல் கோவிந்தராஜ்க்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்து 27 ஆயிரத்து 175 வழங்க உத்தரவிட்டது.இழப்பீடு தொகை வழங்காததால் கோவிந்தராஜ் இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சத்து 41 ஆயிரத்து 956 வழங்க கேட்டு தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன்ராம் இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன் படி மதுரை அரசு போக்குவரத்துக்கழகத்தை சேர்ந்த பஸ்சை ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் நீதிமன்ற அமீனா மணிகண்டன் அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
14-Jun-2025