உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பார்த்திபனுாரில் பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்: விபத்து அபாயம்

பார்த்திபனுாரில் பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்: விபத்து அபாயம்

பரமக்குடி : பரமக்குடி அருகே பார்த்திபனுார் பஸ்ஸ்டாண்ட் ரோடு சேதமடைந்த நிலையில் வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்கின்றன. இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.பரமக்குடியில் இருந்து மதுரை செல்லும் வழித்தடத்தில் பார்த்திபனுார் தவிர்க்க முடியாத பஸ் ஸ்டாண்ட் ஆக உள்ளது. இங்கிருந்து கமுதி, முதுகுளத்துார் உட்பட ஏராளமான கிராமங்களுக்கு பல ஆயிரம் மக்கள் தினம் தினம் வந்து செல்கின்றனர். இதனால் மதுரை வழித்தடத்தில் வரும் பெரும்பாலான பஸ்கள் பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்ட் சென்று வருகின்றன. இந்நிலையில் பஸ்ஸ்டாண்ட் நுழையும் இடங்களில் மற்றும் அப்பகுதி முழுவதும் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் பள்ளங்களை அறியாமல் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே பஸ் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நிலையை கருத்தில் கொண்டு ரோட்டை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி