உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சத்தியமூர்த்தி காலனியில் பஸ் ஸ்டாப் நிழற்குடை சேதம்

சத்தியமூர்த்தி காலனியில் பஸ் ஸ்டாப் நிழற்குடை சேதம்

பரமக்குடி: பரமக்குடி அருகே சத்தியமூர்த்தி காலனி பஸ் ஸ்டாப் அருகே நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால் பயணிகள் விபத்து அச்சத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது.பரமக்குடி - முதுகுளத்துார் ரோட்டில் வெங்கடேஸ்வரா, சத்தியமூர்த்தி, புண்ணிய பூமி ஆகிய நெசவாளர் காலனிகள் உள்ளன. இந்த காலனிகள் உருவாகி 25 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சத்தியமூர்த்தி காலனி முன்பு உள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்கப்பட்டது.தினமும் பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்வோர் என பலர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டு நிழற்குடை பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. இதனால் மழை, வெயில் நேரங்களில் கைத்தறி நெசவாளர்கள் தளவாட பொருட்களை கொண்டு சென்று வரும் பொழுது நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை