உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம்-- நயினார்கோவில் ரோட்டில் கால்வாய் தடுப்பு சீரமைப்பு

எமனேஸ்வரம்-- நயினார்கோவில் ரோட்டில் கால்வாய் தடுப்பு சீரமைப்பு

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் வழியாக நயினார்கோவில் செல்லும் ரோட்டில் கால்வாய் பாலம் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.பார்த்திபனுார் வைகை ஆறு மதகில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் இருக்கிறது. இதன்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கால்வாய்கள் குறுக்கிடுகின்றன. கால்வாய் பாலத்தின் தடுப்பு சுவர்கள் இடிந்து பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை இருந்தது. எமனேஸ்வரத்திலிருந்து நயினார்கோவில் செல்லும் ஜீவா நகர் பகுதி கால்வாய் பாலம் நிலை குறித்து அடிக்கடி தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.இதன் எதிரொலியாக அரசுப் பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை