உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முன்னெச்சரிக்கை: கைது 8

முன்னெச்சரிக்கை: கைது 8

கமுதி: கமுதி, கோவிலாங்குளம், கோட்டைமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குலதெய்வக் கோயில்களில் மாசிகளரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை, மதுரை, திருச்சி, துாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பொங்கல் வைத்து, கிடாய் பலியிட்டு, முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.கமுதி பகுதியில் முன்பகை, கொலை முயற்சி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமுதி அருகே மரக்குளம் முத்துப்பாண்டி 20, கமுதி கார்த்திக் 19, முஸ்டக்குறிச்சி சிவா 19, நெடுங்குளம் நவீன்குமார் 19, அம்மன்பட்டி நந்தகுமார் 19, முகேஷ் 21, கமுதி மேட்டுத் தெரு முகிலன் 19, ஆண்டியேந்தல் சந்தோஷ் 20, ஆகிய 8 பேரை கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ