கமுதியில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்
கமுதி: -கமுதி குண்டாறு எட்டுக்கண் பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ரோட்டோரத்தில் காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் ராட்சத குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கமுதி குண்டாறு எட்டுக்கண் பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தண்ணீரும் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காவிரி குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.