உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாய் உடைப்பு சரிபார்ப்பு

காவிரி குழாய் உடைப்பு சரிபார்ப்பு

முதுகுளத்துார் : -தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை விலக்கு ரோட்டில் ஏற்பட்டுள்ள காவிரி குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. மு.கடம்பன்குளம், மேலமானாங்கரை, மரவெட்டி கிராமத்தில் 250க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு மேலமானாங்கரை விலக்கு ரோட்டில் கடந்த ஒருமாதத்திற்கு மேலாகவே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காவிரி குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை