உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குடிநீர் குழாய் உடைந்து ரோடு சேதம்

காவிரி குடிநீர் குழாய் உடைந்து ரோடு சேதம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி சங்கரபாண்டி ஊருணி -கமுதி ரோட்டில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் ரோடு சேதம் அடைந்துள்ளதால் மக்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சி சங்கரபாண்டி ஊருணி பாதை -கமுதி ரோட்டில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ரோட்டோரத்தில் காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.குடிநீர் ரோட்டில் தேங்கும் நிலையில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பால் ரோடு சேதமடைந்து நடப்பதற்கே லாயக்கற்றதாக மாறியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் சுற்றிச் செல்கின்றனர். எனவே காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி