உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கல் கண்மாய் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தேக்கம் கண்டுகொள்ளாத குடிநீர் வடிகால் வாரியம்

சிக்கல் கண்மாய் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தேக்கம் கண்டுகொள்ளாத குடிநீர் வடிகால் வாரியம்

சிக்கல், : சிக்கல் அருகே சுற்று வட்டாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் குளம் போல் தேங்குகிறது. சிக்கல் அருகே உள்ள கண்மாய் கரையோரத்தில் உள்ள பொட்டல்பச்சேரி அடுத்த கிராமத்தில் செல்லக்கூடிய பிரதான காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அவற்றில் இருந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்ட கண்மாய் பகுதியில் தண்ணீர் ஒரு வாரமாக வழிந்தோடுவதால் குளம்போல் தேங்கியுள்ளது. சிக்கலை சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது: பொட்டல்பச்சேரி, ஆலங்குளம், புத்தேந்தல், ஆலங்குளம், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு வரத்து கால்வாய் மடை வழியாக சென்று கண்மாய்க்குள் குளம் போல் தேங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் வந்தவுடன் சரி செய்கிறோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் தற்போது வரை தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. எனவே மாதாந்திர பராமரிப்புக்கான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அரசு நிதி ஒதுக்கி வரும் நிலையில் இது போன்ற மெத்தனப் போக்கால் கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !