உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு; தினமலர் செய்தி எதிரொலி

காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு; தினமலர் செய்தி எதிரொலி

முதுகுளத்துார்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் -கமுதி ரோட்டில் காவிரி குழாய் உடைப்பு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். முதுகுளத்துார் பகுதியில் ரோட்டோரத்தில் காவிரி குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார் -- கமுதி ரோடு, முதுகுளத்துார் அருகே மகிண்டி, கீழத்துாவலில் கடந்த சில நாட்களாகவே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. குடிநீர் எந்தவித பயன்பாடின்றி வீணாகியது. குழாய் உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்துதினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக முதுகுளத்துார் கமுதி ரோட்டில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை