மேலும் செய்திகள்
காத்தாகுளத்தில் 'சிசிடிவி' அமைப்பு
18-Jun-2025
உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., திட்ட முகாம்
23-May-2025
கமுதி: கமுதி-மதுரை ரோடு பசும்பொன் அருகே 'சிசிடிவி' கேமரா பயன்பாடின்றி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., என்ற பெயரில் எஸ்.பி., சந்தீஷ் பல்வேறு கிராமங்களில் நேரில் ஆய்வு செய்து அங்கு கிராமங்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு அதன் கண்காணிப்பு அறைகளை ஆய்வு செய்தும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கமுதி அருகே பசும்பொன் விலக்கு ரோட்டில் 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி செல்பவர்களை கண்டுபிடிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. கமுதி - மதுரை செல்லும் முக்கியமான ரோடு என்பதால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது பசும்பொன் விலக்கு ரோட்டில் 'சிசிடிவி' கேமரா பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது. இதனால் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவர்களை கண்டறிவதில் தாமதம் ஏற்படும். குருபூஜை நேரத்தில் மட்டும் சிசிடிவி கேமரா பழுது பார்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பாதுகாப்பு நலன்கருதி பசும்பொன் விலக்கு ரோட்டில் நிரந்தரமாக 'சிசிடிவி' கேமரா பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
18-Jun-2025
23-May-2025