மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 10ம் வகுப்பு ஆசிரியர்கள் கோரிக்கை
ராமநாதபுரம்: மாணவர்களின் நலன் கருதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 10ம் வகுப்பு ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. மாநில செய்திப்பிரிவு செயலாளர் நல்லதம்பி கூறியதாவது: 2027 பிப்.,ல் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 10ம் வகுப்பு ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே 10ம் வகுப்பு ஆசிரியர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இப்பணியில் கல்வித்துறையினரை மட்டும் பயன்படுத்தாமல் பிற துறையினரையும் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இயக்குநர் அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகம், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மனு வழங்கி வருகிறோம். விருதுநகர், தேனி மாவட்டங்களில் விலக்கு அளிப்பதாக கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.