உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அரசு கல்லூரியில் செஸ் டேபிள் டென்னிஸ் போட்டிகள்: 11 கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

பரமக்குடி அரசு கல்லூரியில் செஸ் டேபிள் டென்னிஸ் போட்டிகள்: 11 கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் 2025 --26ம் கல்வி ஆண்டிற்கான அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் பிரிவு செஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தது. பரமக்குடி கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பரமக்குடி அரசு கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பிரசாத் வரவேற்றார். செஸ் போட்டியில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி, கீழக்கரை செய்யது ஹமிதியா கல்லுாரி, முத்துப்பேட்டை கவுசானல் கலை கல்லுாரி, கன்னிராஜபுரம் தியாகி சேர்மத்தாய் கல்லுாரி, கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி, அழகப்பா பல்கலை அணி, ராமேஸ்வரம் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் கல்லுாரி, பரமக்குடி அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட 11 கல்லுாரி வீரர்கள் பங்கேற்றனர். செஸ் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் வீதம் 66 பேர் பங்கேற்றனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் 6 கல்லுாரி அணியினர் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு அணிக்கும் 5 வீரர்கள் வீதம் 30 பேர் பங்கேற்றனர். போட்டி ஒருங்கிணைப்பாளர் சேதுபதி கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மணிமுத்து, இணை ஒருங்கிணைப்பாளர் செய்யது அம்மாள் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சவேரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை