உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளியில் செஸ் போட்டி

அரசு பள்ளியில் செஸ் போட்டி

பரமக்குடி: பரமக்குடி அருகே காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போகலுார் ஒன்றிய அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025 -26 ம் கல்வி ஆண்டிற்கான போட்டியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமையாசிரியை இந்திராணி தலைமை வகித்தார். ஆசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். போட்டிகள் 17 மற்றும் 19 வயது பிரிவின் கீழ் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் கருப்புசாமி, தண்டபாணி வாழ்த்தினர். காமன்கோட்டை பள்ளி மாணவர்கள் 17 வயது பிரிவில் முகேஷ், 19 வயதில் ஜெயசீலன் 2ம் இடம் பெற்றனர். உடற்கல்வி ஆசிரியர் அசோக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை