மேலும் செய்திகள்
ரோட்டோர குப்பையால் சுகாதாரக்கேடு
14-Jun-2025
பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு அருகே தினைக்குளம் மற்றும் நாகநாத சமுத்திரம் செல்லும் ரோட்டோரங்களில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் பிராய்லர் கோழி கழிவுகளை மூடையாக கொட்டி செல்லும் போக்கு தொடர்கிறது. அப்பகுதி மக்கள் கூறியதாவது:வண்ணாங்குண்டு ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் பிராய்லர் கோழி கழிவுகளை மூடைகளாக கட்டி அவற்றை சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்வதால் அருகே உள்ள நீர்நிலைகள் மாசடைகின்றன. கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகளை தேடி வெறி நாய்கள் கூட்டமாக திரிகின்றன.அகற்றப்படாத கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் இறைச்சி கழிவுகளை அகற்றுவது குறித்த உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சுகாதார சீர்கேட்டில் இருந்து தப்பிக்கலாம் என்றனர்.
14-Jun-2025