நாளை மறுநாள் முதல்வர் ராமநாதபுரம் வருகை: அமைச்சர் ஆய்வு
ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்திற்கு நாளை மறுநாள் (செப்.,29ல்) வருகை தர உள்ளார். இதையடுத்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுகூட்டத்தில் நகரில் 1.04 கி.மீ.,ரோடு ேஷாவிற்கான முன் னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செப்., 29ல் மதியம் வருகிறார். அப்போது மாவட்ட எல்லையான பார்த்தி பனுார் துவங்கி பரமக் குடியில் இருந்து ராமநாதபுரம் நகர் வரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர். அன்று மாலை 5:00 மணிக்கு ராமநாதபுரம் நகரில் சாலைத்தெரு ரோமன் சர்ச்சில் இருந்து அரண்மனை சென்டர் பிளாக் வழியாக கேணிக்கரை சந்திப்பு வரை 1.04 கி.மீ., முதல்வர் ஸ்டாலின் நடந்து செல்லும் ரோடு ேஷா நடக்கிறது. அப்போது விவசாயிகள், மாணவர்கள், மகளிர் குழுவினர், வர்த்தகர் சங்கத் தினரை முதல்வரை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் பிறகு இரவு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் தங்குகிறார். அப்போது தி.மு.க., மற்றும் காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கிய பிர முகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுநாள் (செப்.,30ல்) காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் அருகே புல்லங்குடியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதற்காக 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் தனித்தனி பாக்ஸ் களாக கூட்ட அரங்கம், விழா மேடை அமைக்கும் பணிகள் நடக்கிறது. விழாவில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட்டை திறந்து வைத்து புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் அறிவிக்க உள்ளார். அமைச்சர் ஆய்வு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று மாலை அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்.எல்.ஏ.,க்கள், அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பிறகு பாரதிநகரில் உள்ள தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு, ரோடு ேஷா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடந்தது.