முதல்வர் கோப்பை குத்துச்சண்டை; முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு
முதுகுளத்துார்; மதுரையில் நடந்த முதல்வர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்துாரை சேர்ந்த யுவதில்லை ராஜன், சிவபாரதி வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மதுரையில் மண்டல அளவிலான முதல்வர் கோப்பை குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் டைகர் பாக்சிங் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த யுவதில்லை ராஜன் 40 கிலோ பிரிவில் முதல் பரிசு, சிவபாரதி 46 கிலோ பிரிவில் இரண்டாவது பரிசு பெற்றனர். இவர்கள் சென்னையில் அக்.,ல் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களை பயிற்சியாளர் பாஸ்கரன் உட்பட பெற்றோர், வீரர்கள் பலர் பாராட்டினர்.