உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சைல்ட் ஹவுஸ் திட்டம் துவக்கம்

சைல்ட் ஹவுஸ் திட்டம் துவக்கம்

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 'சைல்ட் ஹவுஸ்' திட்டம் துவக்கப்பட்டது.வட்டார கல்வி அலுவலர் சூசைராஜ் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வான் தமிழ் இளம்பருதி முன்னிலை வகித்தார். மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர் ராமர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகராஜ் வாழ்த்தினர்.மாணவர்களுக்கு சுகாதாரம், கல்வி, நன்னடத்தையுடன் கூடிய தலைமை பண்பு வளர இத்திட்டம் செயல்படும் என்றனர். தலைமையாசிரியர் அமுதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை