மேலும் செய்திகள்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தின விழா
15-Nov-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் குழந்தைகள் தினவிழா உச்சிப்புளி சமுதாய கூடத்திலும், திருப்புல்லாணி ஜீயர் மடம் மற்றும்சாயல்குடி சமுதாயக்கூடத்திலும் நடந்தது. ஆர்.டபிள்யூ.டி.எஸ்., இயக்குநர் சாத்தையா தலைமை வகித்தார். உச்சிப்புளி எஸ்.ஐ., காந்திமதி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலர் கோட்டை இளங்கோவன், திருப்புல்லாணி எஸ்.ஐ. தங்கராஜ், கடலாடி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் வேளாங்கண்ணி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினர். ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினார். 6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் ஓவியம் வரைந்தும், 9 முதல் பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் இலக்கு, லட்சியம் குறித்து கட்டுரை எழுதி திறமைகளை வெளிப்படுத்தினர்.
15-Nov-2024