உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத சிறுவர் பூங்கா

கமுதியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத சிறுவர் பூங்கா

கமுதி:கமுதி பேரூராட்சி கண்ணார்பட்டியில் கட்டி முடித்து பலமாதங்களாகியும் திறக்கப்படாமல் இருக்கும் சிறுவர் பூங்காவால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.கமுதி பேரூராட்சி 1வது வார்டு கண்ணார்பட்டியில் 2023-24 நிதியாண்டில் அம்ரூத் திட்டத்தில் ரூ.23 லட்சத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக நடைபயிற்சி பாதையுடன் கூடிய சிறுவர் பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது வரை சிறுவர் பூங்கா திறக்கப்படாமல் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. சிறுவர் பூங்கா சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில் பூங்கா பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சிறுவர் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை