உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தைகள் அறிவியல் மாநாடு  பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

குழந்தைகள் அறிவியல் மாநாடு  பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

ராமநாதபுரம்: குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி நடந்தது. ​தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடக்கிறது. நடப்பாண்டு நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற மையக் கருப்பொருளை கொண்டு குழந்தைகள் ஆய்வு செய்ய வுள்ளனர். இதில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட ஆசிரியர் களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முகமது தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் ஒரு நாள் பயிற்சி நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் லியோன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேரோம், மாவட்ட செயலாளர் காந்தி, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், கல்லுாரியின் முதல்வர் சோமசுந்தரம், தஸ்தகீர் மெட்ரிக் பள்ளிமுதல்வர் சரண்யாஸ்ரீ ஆகியோர் வாழ்த்தி பேசினார். அழகப்பா பல்கலைக் கல்லுாரி பேராசிரியர் கருணாகரன் அறிவியல் ஆய்வு செய்வதற்கான வழி காட்டுதலையும், அறிவியல் இயக்கத்தின் முன்னாள்மாநில தலைவர்தினகரன் உலக அளவில் நீர் மேலாண்மையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசினர். குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கல்வி ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை