மேலும் செய்திகள்
கனமழையால் மிளகாய் விவசாயம் பாதிப்பு
25-Nov-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நெற்பயிர்களுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரம் பெய்த மழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த மிளகாய் வயல்களில் மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்டன. வயல்களில் இருந்து மழை நீரை வெளியேற்றிய விவசாயிகள் தற்போது மீண்டும் மிளகாய் நாற்றுகளை வாங்கி மிளகாய் வயலில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நெற்பயிர்களை போன்று மிளகாய்க்கு அதிக தண்ணீர் தேவையில்லை. லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் மகசூல் கொடுக்கக்கூடியது என்பதால் தற்போது மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
25-Nov-2025