மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலத்தில் துாறல் மழை
28-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகில் மிளகாய் விதைப்பு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம், புல்லமடை, சவேரியார் பட்டினம், வல்லமடை, இருதயபுரம், செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி, வரவணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆர். எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்புற பகுதி கிராமங்களில் விவசாயிகள் மிளகாய் விதைப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். உழவு செய்து மிளகாய் விதைப்புக்கு ஏற்ற நிலையில் தயார் செய்து வைத்திருந்த நிலங்களில் விவசாயிகள் தற்போது மிளகாய் விதைப்பு செய்கின்றனர். மிளகாய் விவசாயத்தை பொறுத்த வகையில் அதிக தண்ணீர் தேவையின்றி லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் மகசூல் கொடுக்கக்கூடியது என்பதால் மிளகாய் விவசாயத்தில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
28-Sep-2024