உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம்

மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், வேளாண்மை விற்பனை, வணிகத்துறை இணைந்து மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம் நடந்தது.சென்னை வேளாண்மை விற்பனை, வேளாண் வணிக ஆணையரக இணை இயக்குநர் அமுதன்தலைமை வகித்தார். ராமநாதபுரம் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். வேளாண் இணை இயக்குநர்(பொ) பாஸ்கரமணியன், வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல்கண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் முதுநிலை மேலாளர் கவிமுகில் முன்னிலை வகித்தனர்.இதில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிளகாய் விளைச்சலை அதிகரிப்பது,மதிப்பு கூட்டி விற்று விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் மற்றும்விவசாயிகளிடமிருந்து நுகர்வோரிடம் சென்றுசேரும் வரை மிளகாய் மதிப்பு சங்கிலியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி, மதுரையை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் பங்கேற்றனர். வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் முதுநிலைமேலாளர் பாண்டித்துரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை