உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச் தேர்பவனி திருவிழா

சர்ச் தேர்பவனி திருவிழா

தொண்டி: தொண்டி அருகே நரிக்குடி கிராமத்தில் புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தேர்பவனி முக்கிய தெருக்கள் வழியாக சென்று சர்ச்சை வந்தடைந்தது. தொண்டி அருகே கண்கொள்ளாபட்டினத்தில் புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா ஜூலை 16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார் செல்வகுமார், உதவி பாதிரியார் பாக்கியராஜ் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அந்தோணியார், சந்தியாகப்பர் அமர்ந்த தேர்பவனி நடந்தது. நேற்று காலை கொடியிறக்கம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை