உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்கச்சிமடத்தில் சர்ச் திருவிழா தேர் பவனி

தங்கச்சிமடத்தில் சர்ச் திருவிழா தேர் பவனி

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் புனித குழந்தை தெரசாள் சர்ச் திருவிழாவில் அலங் கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்தது. தங்கச்சிமடத்தில் உள்ள பழமையான புனித குழந்தை தெரசாள் சர்ச் 100ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு சர்ச் வளாகத்தில் தக்கலை மறைமாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித குழந்தை தெரசாள் எழுந்தருளியதும் தேர் பவனி நடந்தது. இதில் பாதிரியார்கள் ஆரோக்கியராஜா, ஜெபாஸ்டின், ராமேஸ் வரம் தீவில் உள்ள அருட்சகோதரிகள், இறைமக்கள் ஏராளமானோர் பங்கேற்று அருளாசி செய்தனர். விழா ஏற்பாடுகளை தண்ணீர் ஊற்று, வேர்க்காடு, தென்குடா, அரியாங் குண்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை