கோ--ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் மூடல் 50 ஆண்டு பாரம்பரியத்தை மீட்க கோரிக்கை
பரமக்குடி:பரமக்குடியில் 50 ஆண்டுகளாக இயங்கி வந்த மூடப்பட்ட கோ--ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தை மீண்டும் திறக்க நெசவாளர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாட்டில் 1110 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவு செய்து உறுப்பினர்களாக இருந்து வரு கின்றனர். இவர்கள் கூட்டுறவு சங்கங்களில் பாவு நுால் பெற்று சேலை, வேட்டி, துண்டு, ஜமுக்காளம், காட்டன் மற்றும் அசல் பட்டு ரகங்கள் உற்பத்தி செய் கின்றனர். தொடர்ந்து அந்தந்த சங்கங்களில் வரவு வைத்து ரகத்திற்கான கூலியை பெறுகின்றனர். இவ்வாறு கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் தாய் சங்கமான கோ--ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி திட்டத்தின் அடிப்படையில் பெற்று விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோ--ஆப் டெக்ஸ் மண்டல வாரியாக சங்கங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ரகங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு விற்பனை நிலையங் களுக்கு அனுப்பி வைக்கப்படுவது அரசின் நடவடிக்கையாக உள்ளது. இதன்படி பரமக்குடி பெருமாள் கோவில் தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட கோ--ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த மாதம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வரும் நிலையில் கோ--ஆப் டெக்ஸ் மூடப்பட்டதால் நெசவாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இது குறித்து கடந்த ஆண்டுகளில் தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதன் பேரில் வாடகை கட்டடத்தில் இயங்கிய நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பல ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் உள்ள இப்பகுதியின் அடையாள சின்னமான கோ--ஆப்டெக்ஸ் மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் பெடரேசன் செயலாளர் கோதண்டராமன் தெரிவித்தார்.