தொண்டியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
தொண்டி: தேவிபட்டினம், தொண்டி கடலில் ‘சீ விஜில்’ எனப்படும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை சோதனை நடந்தது.இந்திய கடற்படை ஒருங்கிணைப்பில் கடலோர பகுதிகளில் ‘ஆப்பரேஷன் சீ விஜில்’ கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. ராமநாதபுரம் (வடக்கு) தேவிபட்டினம் ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை கடலில் ரோந்து மற்றும் படகு தணிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோர பாதுகாப்பு தயார் நிலையை ஆய்வு செய்யவும் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி., ரோஹித்நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் கூடுதல் எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மரைன் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, எஸ்.ஐ., அய்யனார், நுண்ணறிவு பிரிவு ஏட்டு சரவணபாண்டி மற்றும் மரைன் போலீசார் ரோந்து படகில் கடலுக்குள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மீனவர்களின் படகுகள் சோதனையிடப்பட்டன.