இடிந்து விழுந்த பழங்குளம் வி.ஏ.ஓ., அலுவலக கூரை
திருவாடானை: திருவாடானை அருகே மங்களக்குடி பிர்கா பழங்குளம் குரூப் வி. ஏ. ஓ., அலுவலகம் பழுதாகி இருந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு வி.ஏ.ஓ., சேக்ரட்நாத், கிராம உதவியாளர் பாரதி ஆகியோர் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். விவசாயி களுக்கு அடங்கல் வழங்கும் பணியும் நடந்தது. அப்போது அலுவலக கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் அடங்கல் வாங்க சென்ற திருப்பாக்கோட்டை விவசாயி பூமி 45, என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மங் களக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு நலன் கருதி அலுவலகம் பூட்டப்பட்டு, பழங்குளம் ஊராட்சிக்கு சொந்தமான இ-சேவை மைய கட்டடத் தில் தொடர்ந்து பணிகள் நடப்பதாக வி.ஏ.ஓ., சேக்ரட்நாத் கூறினார்.