ரத்த தானம் செய்த கலெக்டர் அலுவலகப் பணியாளர்கள்
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ரத்த தானம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தானம் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து ரத்த தானம் செய்தார். அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ரத்த தானம் அளித்தனர். அவர்களுக்கு பாராட்டுச் சான்றுகளை கலெக்டர் வழங்கினார். மாவட்ட ரத்த மைய மருத்துவ அலுவலர் மணிமொழி ஏற்பாடுகளை செய்திருந்தார்.