காரங்காடு சுற்றுலா மையத்தை மேம்படுத்த கலெக்டர் உத்தரவு
திருவாடானை: காரங்காடு சுற்றுலா மையத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார்.தொண்டி அருகே காரAங்காட்டில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அங்குள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். காரங்காடு ஊராட்சி சார்பில் துாய்மை பாரத இயக்கம் சார்பில் பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கபட்டு, பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கபட்டது. நாட்டுபடகு மீனவர்களின் குறைகள் கேட்கபட்டது. காரங்காடு சுற்றுலா மையத்திற்கு சென்று அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வனத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். திருவாடானை தாசில்தார் அமர்நாத், அலுவலர்கள் உடனிருந்தனர்.