உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழிபாடு நடத்த விடாமல் கோயிலை பூட்டியதாக  புகார் 

வழிபாடு நடத்த விடாமல் கோயிலை பூட்டியதாக  புகார் 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே நல்லிருக்கை பகுதியில் உள்ள ஆலங்குளம் வாழவந்தாள் அம்மன் கோயிலில் சுவாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் புகார் மனு அளித்தனர். கீழக்கரை தாலுகா நல்லிருக்கை அருகே ஆலங்குளத்தில் வாழவந்தாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் கோயிலை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதன் காரணமாக சுவாமி கும்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் மற்றும் தாசில்தாரிடம் புகார் செய்தனர். அதிகாரிகள் சமரசம் பேசிய பின்னர் சாவி தருவதாக தெரிவித்தவர்கள் சாவியை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தனர். மாவட்ட வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜூலுவிடம் மனுவைவழங்கினர். இது குறித்து இரு தரப்பினரையும் அழைத்து ராமநாதபுரம் கோட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை