உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்: அதிகாரிகளின் கவனத்திற்கு..

சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்: அதிகாரிகளின் கவனத்திற்கு..

குண்டும் குழியுமான ரோடு பரமக்குடி தெளிச்சாத்த நல்லுார் திருநகர் 2வது தெருவில் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர். சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -குணசீலன், பரமக்குடி. கோயில் அருகே சுகாதாரக்கேடு ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் அருகே ரோட்டோரத்தில் குப்பையை கொட்டுவதால் துர்நாற்றத்தால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். - ஸ்ரீவித்யா, ராமநாதபுரம். வீணாகும் குடிநீர் ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானம் அருகே குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் ரோட்டில் வீணாகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பார்த்திபன், ராமநாதபுரம். தெருநாய்கள் தொல்லை பேராவூர் மெயின் ரோட்டில் திரியும் நாய்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை பிடித்து தடுப்பூசி இடவேண்டும். நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். - சுமதி, பேராவூர். மரக்கிளையால் ஆபத்து ராமநாதபுரம் சுவாமி விவேகானந்தர் ரோட்டில் செய்யது அம்மாள் மருத்துவமனை எதிரில் உள்ள ரோட்டில் உள்ள மரத்தின் கிளைகள் மின் கம்பியின் மீது சரிந்து உள்ளது. மழை பெய்து மரக்கிளை மின்கம்பியில் முறிந்து விழுவதற்குள் அதை அகற்றவேண்டும். -அஸ்மாபாக் அன்வர்தீன், சிகில் ராஜ வீதி, ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி